ஹாக்கி 68 பல்கலைகள் பலப்பரீட்சை
சென்னை,சென்னை பல்கலையின் தென் மண்டல ஆடவர் ஹாக்கி போட்டி, எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி ஆதரவில், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் துவங்கியது. 68 பல்கலை அணிகள் பங்கேற்றுள்ளன.நேற்று நடந்த ஆட்டத்தில், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலை மற்றும் மகாத்மா காந்தி பல்கலை இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.மதுரை காமராஜர் பல்கலை, 4 - 2 என்ற புள்ளிகளில் ஆச்சார்யா நாகார்ஜுனா பல்கலையையும், கர்நாடகா பல்கலை 5 - 0 என்ற புள்ளிகளில் ஸ்ரீ கிருஷ்ணன தேவராய பல்கலையையும், அண்ணா பல்கலை, 8 - 1 என்ற புள்ளிகளில் கர்நாடகா கொடகு பல்கலை அணியை வீழ்த்தின. போட்டிகள் தொடர்ந்து நடக்கின்றன.