உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வீடுகள் விற்பனை 18 சதவீதம் உயர்வு

 வீடுகள் விற்பனை 18 சதவீதம் உயர்வு

சென்னை: 'சென்னையில் இந்தாண்டு ஜன., முதல் டிச., வரை, 15,000 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது, கடந்த ஆண்டைவிட, 18 சதவீதம் அதிகம்' என, 'கிரெடாய்' அமைப்பு தெரிவித்துள்ளது. இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்கள் கூட்டமைப்பான 'கிரெடாய்' சென்னை பிரிவு தலைவர் முகமது அலி வெளியிட்ட அறிக்கை: கடந்த அக்., இறுதி வரை, 26,482 வீடுகள் அடங்கிய, 250 புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இது, கடந்த ஆண்டைவிட, 20 சதவீதம் அதிகம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், பழைய மாமல்லபுரம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை, ரேடியல் சாலை, போரூர் - பூந்தமல்லி சாலை ஆகிய இடங்களில், அதிக எண்ணிக்கையில் வீடுகள் விற்பனையாகி உள்ளன. குறிப்பாக, சென்னையில் கடந்த ஆண்டு, 12,942 வீடுகள் விற்பனையாகின. ஆனால், நடப்பாண்டில் ஜன., முதல் டிச., வரை, 15,000க்கு மேல் வீடுகள் விற்பனையாகி, 18 சதவீதம் உயர்ந்துள்ளது. வீட்டுவசதி துறை தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டுள்ள சட்ட ரீதியான நடவடிக்கைகள், வீட்டுக்கடன் வட்டி குறைப்பு, ஜி.எஸ்.டி., குறைப்பு போன்ற காரணங்களால், வீடு விற்பனை அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இது மேலும் அதிகரிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை