உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஹோட்டல் ஊழியரின் பைக் திருட்டு

ஹோட்டல் ஊழியரின் பைக் திருட்டு

அண்ணா நகர், அண்ணா நகர், ஆறாவது பிரதான சாலையை சேர்ந்தவர் வீராசாமி, 49. இவர், அண்ணா நகர் இரண்டாவது அவென்யூவில் உள்ள ஹோட்டலில் பணிபுரிகிறார். வீராசாமி, நேற்று முன்தினம் இரவு, தன் 'ஹோண்டா சைன்' இருசக்கர வாகனத்தை, ஹோட்டலின் எதிரே நிறுத்திவிட்டு, பணிக்கு சென்றுள்ளார். சில மணிநேரத்திற்கு பின், வந்து பார்த்த போது, இருசக்கர வாகனம் திருடுபோனது தெரிந்தது. நேற்று காலை அண்ணா நகர் போலீசில் வீராசாமி புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ