உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர்கள் பலி

மாமல்லை கடலில் மூழ்கி விடுதி ஊழியர்கள் பலி

மாமல்லபுரம், மாமல்லபுரம் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி, தனியார் விடுதி ஊழியர்கள் இருவர் பலியாகினர்.மேகாலயா, ஷில்லாங் பகுதியைச் சேர்ந்த பரங்சிங் தோலிங், 26, கிழக்கு காஷிஹில் பகுதியைச் சேர்ந்த லரிசா மெரி லாட்டிங், 22, ஆகியோர், மாமல்லபுரம், தேவனேரி தேவனேரி தனியார் கடற்கரை விடுதியில் பணிபுரிந்தனர்.நேற்று மாலை இருவரும், உடன் பணிபுரியும் ஒருவருடன், மாமல்லபுரம் கடலில் குளித்தனர். அப்போது, ராட்சத அலை அவர்களை இழுத்துச்சென்றது. இதில் பரங்சிங் தோலிங், கடற்கரை கோவில் பகுதி பாறை கற்கள் இடுக்கில் சிக்கி உயிரிழந்தார். லரிசா மெரி லாட்டிங் உடல், கோவில் தெற்கு பகுதியில் கரை ஒதுங்கியது. மற்றொருவரை, மீனவர்கள் உயிருடன் மீட்டனர்.தகவலறிந்து வந்த மாமல்லபுரம் போலீசார், உடல்களை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி