அயனாவரத்தில் 203 வீடுகளை விற்கிறது வீட்டு வசதி வாரியம்
சென்னை: சென்னை, அயனாவரத்தில், வீட்டு வசதி வாரியம் 35 கிரவுண்ட் நிலத்தில், 13 மாடி குடியிருப்புகளை கட்டியுள்ளது. இதில், 933 முதல் 1,003 சதுர அடி வரை பரப்பளவு உள்ள, 203 வீடுகள் உள்ளன. நடுத்தர வருவாய் பிரிவினருக்கு, இந்த வீடுகளை ஒதுக்க வீட்டு வசதி வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த வீடுகளுக்கான விலை, 89 லட்சம் முதல் 97 லட்சம் ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மாத வருவாய், 70,000 ரூபாய் வரை உள்ளவர்கள், இந்த வீடுகள் ஒதுக்கீட்டுக்கான குலுக்கலில் பங்கேற்கலாம். இதற்கான விண்ணப்பங்களையும், கூடுதல் விபரங்களையும், https://tnhb.tn.gov.inஇணையதளத்தில் பெறலாம். இதில் வீடு வாங்க விரும்புவோர், நவ., 22க்குள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம் என, வீட்டுவசதி வாரியம் அறிவித்துள்ளது.