மேலும் செய்திகள்
பிளாஸ்டிக் நிறுவனத்தில் தீ விபத்து
04-Apr-2025
ஆவடி, அம்பத்துார், டீச்சர்ஸ் காலனியில் உள்ள மகளிர் விடுதியில் வசிப்பவர் சத்யா, 38. இவரது கணவர் ஜெபராஜ், 41. இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.சத்யா, ஆவடி, கன்னப்பாளையம், பஜனை கோவில் தெருவில் 'அமுதா கார்மெண்ட்ஸ்' என்ற பெயரில் ஆடை உற்பத்தி தொழில் செய்து வருகிறார்.ஜெபராஜ், 18ம் தேதி மாலை அங்கு சென்று, அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, தன் மீதும், சத்யா மீதும் ஊற்றி தீ வைத்துள்ளார். அந்த தீ, கார்மெண்ட்ஸ் முழுதும் பரவியது.தகவலறிந்து சென்ற தீயணைப்பு துறையினர், இருவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், ஜெபராஜ் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
04-Apr-2025