உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு

ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு

சென்னை: சென்னை ஆறுகள் சீரமைப்பு இயக்குனராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர ரத்னு, திடீரென விருப்ப ஓய்வில் சென்றார். சென்னையில் அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளை, மறுசீரமைப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர ரத்னு செயல்பட்டு வந்தார். இவர் திடீரென விருப்ப ஓய்வு பெற்றுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ராஜேந்திர ரத்னு, கடந்த 2001ம்ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் பணியில் சேர்ந்தார். இங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றினார். இவர் ஓய்வு பெற, இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில், அவர் திடீரென விருப்ப ஓய்வில் சென்றது, அதிகாரிகள் வட்டாரத்தில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N Sasikumar Yadhav
ஆக 23, 2025 18:11

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி கூவத்தில் நீந்திய ஊழல் முதலை ஞாபகம் வந்திருக்கும் அதனால விருப்ப ஓய்வில் சென்றிருப்பாரு


சமீபத்திய செய்தி