உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சீனியர் வாலிபால் போட்டி ஐ.சி.எப்., அணி வெற்றி

சீனியர் வாலிபால் போட்டி ஐ.சி.எப்., அணி வெற்றி

சென்னை, , ஆடவர் பிரிவு போட்டியில், ஐ.சி.எப்., சென்னை அணி, 2 - 0 என்ற செட் கணக்கில், தளபதி நற்பணிமன்ற அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில், மாநில அளவில் சீனியர் வீரர் மற்றும் வீராங்கனையருக்கு, 71வது வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர், சென்னையில் நடந்து வருகிறது. இதில், 24 அணிகள் மோதுகின்றன.அந்த வகையில், நேற்றுமுன்தினம் நடந்த ஆடவருக்கான முதல் போட்டியில், எஸ்.ஆர்.எம்., அகாடமி, அண்ணா திருமயம் அணிகள் மோதின. இதில், எஸ்.ஆர்.எம்., அகாடமி அணி, 25 - 20, 21 - 25, 25 -17 என்ற செட் கணக்கில், அண்ணா திருயம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.அடுத்த போட்டியில், எஸ்.டி.சி., பொள்ளாச்சி அணி, 25 - 17, 17 - 25, 25 - 21 என்ற செட் கணக்கில், தளபதி நற்பணிமன்றம் அணியை வீழ்த்தியது.அடுத்து போட்டியிட்ட கால்டுவெல் துாத்துக்குடி அணி, 25 - 27, 25 - 17, 25 - 22 என்ற செட்டில், ராணிபேட்டை அணியை வீழ்த்தியது. பெண்கள் பிரிவுதொடர்ந்த நடந்த பெண்கள் பிரிவு முதல் போட்டியில், சிஸ்டர் ஏஞ்சல் அணி, வேலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை எதிர்த்து மோதியது. இதில், சிஸ்டர் ஏஞ்சல் அணி, 25 - 18, 25 - 17 என்ற செட் கணக்கில், வேலுார் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை வீழ்த்தியது.அடுத்த போட்டியில், நிர்மலா சி.பி.இ., அணி, 25 - 10, 23 - 25, 25 - 20 என்ற செட்டில், குமுதா ஈரோடு அணியையும், எஸ்.ஆர்.எம்., ஸ்பைக்கர்ஸ் சென்னை ஸ்போர்ட்ஸ் அகாடமி அணியை, 25 - 8, 25 - 17 என்ற செட்டிலும், அடுத்த போட்டியில் மீனாட்சி சுந்தரி மதுரை அணியை, தங்கவயல் ஓசூர் அணி, 25 - 13, 20 - 25, 25 - 5 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இரவு நடந்த போட்டியில், எஸ்.ஆர்.எம்., - ஐ.எஸ்.டி., அணி, இந்தியன் வங்கி அணியை எதிர்த்து மோதியது. இதில், எஸ்.ஆர்.எம்., - ஐ.எஸ்.டி., அணி, 23 -25, 25 -21, 26 - 24 என்ற செட் கணக்கில், இந்தியன் வங்கி அணியை வீழ்த்தியது. கடைசி போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி, ஐ.ஒ.பி., அணியை, 25 - 19, 23 - 25, 25 - 12 என்ற செட் புள்ளியில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி