உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 1,457 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வினியோகம்

1,457 சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை வினியோகம்

திருவொற்றியூர், திருவொற்றியூரில், சாலையோர வியாபாரிகள், 1,457 பேருக்கு, 'சிப்' மற்றும் கியூ.ஆர்., கோடு வசதியுடன் கூடிய, அடையாள அட்டைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.சென்னை மாநகராட்சியில், 35,588 சாலையோர வியாபாரிகள் உள்ளனர். அவர்களை ஒழுங்குபடுத்தி, 'சிப்' மற்றும் கியூ.ஆர்., கோடு வசதியுடன் கூடிய அடையாள அட்டை வினியோகம் செய்யும் சிறப்பு முகாம், மண்டலம் தோறும், 22ம் தேதி துவங்கி, 30ம் தேதி வரை நடக்கிறது.அந்த வரிசையில், திருவொற்றியூர் மண்டலத்தில், ஏற்கனவே அடையாள அட்டை வைத்திருக்கும், 1,457 சாலையோர வியாபாரிகளுக்கு, புதிய அடையாள அட்டை வினியோகம் செய்யும் பணி நடக்கிறது. இந்த பணியை, திருவொற்றியூர் மண்டல குழு தலைவர் தனியரசு, உதவி வருவாய் அலுவலர்கள் அர்ஜுனன், சுரேஷ் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர்.இதுகுறித்து, உதவி வருவாய் அலுவலர் கூறியதாவது:மண்டலம் முழுதும் பாதசாரிகள், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத பகுதிகளில் உள்ள, ஏற்கனவே அடையாள அட்டை வைத்துள்ள சாலையோர வியாபாரிகளுக்கு, புதிய அடையாள அட்டை வழங்கும் பணி நடக்கிறது.கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தினமும் 200 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அடையாள அட்டை தரப்படுகிறது. புதிதாக யாருக்கும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.அங்கீகரிக்கப்பட்ட விற்பனை சாலைகள் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி, சாலையோர வியாபாரிகளை, 50 மீட்டர் துாரத்தில் இருக்கும் அங்கீகரிக்கப்பட்ட விற்பனை சாலையில் ஒருங்கிணைக்கும் பணியும் நடக்கிறது. இப்பணிகள் விரைவில் முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை