சிக்கன் ரைஸ் தராதால் மண்டை உடைப்பு
பெரம்பூர்,:பெரம்பூர் அருகே அகரம், ரங்கசாய் தெரு பகுதியை சேர்ந்தவர் அப்பாஸ் அலி, 44. இவர், அகரம் சிதம்பரம் சாலையில், பாஸ்ட்புட் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் நான்கு பேர், அப்பாஸ் அலியின் கடைக்கு சென்று, சிக்கன் ரைஸ் கேட்டுள்ளனர். சிக்கன் ரைஸ் காலியாகிவிட்டதாக, அப்பாஸ் அலி கூறியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்தவர், கடையில் இருந்த கரண்டியால், அப்பாஸ் அலியின் தலையில் அடித்துவிட்டு தப்பினர். இடது பக்க தலையில் வெட்டுப்பட்ட அப்பாஸ் அலி, பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகிறார். செம்பியம் போலீசார் வழக்குப்பதிந்து, தாக்குதல் நடத்திய நான்கு பேரை தேடி வருகின்றனர்.