உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஒழுக்கத்தை விதைக்காவிடில் நுாலால் பயன் இல்லை

ஒழுக்கத்தை விதைக்காவிடில் நுாலால் பயன் இல்லை

திருவொற்றியூர்:திருவொற்றியூர் கிளை நுாலகம் வாசகர் வட்டம் சார்பில் நடந்த 93 வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி நடந்தது. இதில், முனைவர் சுந்தரராமன் பேசியதாவது: பிளஸ் 2, 10ம் வகுப்பில் தோல்வியடையும் மாணவர்கள், உயிரை மாய்த்துக் கொள்கின்றனர் என்பதற்காக, அந்த தேர்வுகளை ரத்து செய்வதில்லை. அது போல், 'நீட்' தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்க வேண்டும்.ஒழுக்கம் உள்ளவர் சொன்னால், உலகம் கேட்கும். ஒழுக்கம் இல்லாதவர் சொன்னால் எடுபடாது. நுால் ஒழுக்கத்தை விதைக்கவில்லை என்றால், பயன் இல்லை. தமிழன் கடைப்பிடிக்க வேண்டிய நெறி ஒழுக்கமாகும். தமிழுக்கு பின்னடைவு ஏற்படுகிறது என்றால், ஒழுக்கத்துடன் இருக்கிறோமா என்பதை யோசிக்க வேண்டும்.தேர்தலில், 5,000 ரூபாய் கொடுத்து ஓட்டு பெறுபவர், 50,000 ரூபாய் வரி விதிக்கிறார். ஒழுக்க நெறி இல்லாதவர்களை, புறம் தள்ளுங்கள். எத்தனையோ குடியரசு தலைவர் இருந்தாலும், அப்துல் கலாம் நம் நினைவிற்கு வருகிறது என்றால், அதற்கு ஒழுக்கம் ஒன்றே காரணம்.நுால் சொற்களால் நிரம்பியது. அதை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் போது, ஒழுக்கம் நிறைந்த நுாலாக கடத்த வேண்டும். அறம் செய்ய வேண்டாம். அறம் செய்ய விரும்பினாலே போதும். விருப்பம் தானாக செயலாக மாறும்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்நிகழ்ச்சியில், வாசகர் வட்ட நிர்வாகிகள் துரைராஜ், சுப்பிரமணி மற்றும் நுாலகர் லதா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி