உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மந்த கதியில் படப்பை மேம்பால பணி தெருவில் புகும் வாகனங்களால் அச்சம்

மந்த கதியில் படப்பை மேம்பால பணி தெருவில் புகும் வாகனங்களால் அச்சம்

படப்பை, நவ. 18--வண்டலுார்- வாலாஜாபாத் நெடுஞ்சாலையில், படப்பை பஜார் பகுதியில் ஏற்படும் நெரிசலை குறைக்க, 26.64 கோடி ரூபாயில், மேம்பாலம் அமைக்கும் பணி, 2022, ஜனவரியில் துவங்கி, மந்த கதியில் நடந்து வருகிறது. பாலப்பணிக்காக சாலையின் நடுவே தடுப்புக்கள் அமைக்கப்பட்டன. இதனால் சாலை குறுகளாகி, போக்குவரத்து நெரிசல் வழக்கத்தைவிட இரு மடங்கு அதிகரித்துள்ளது.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:படப்பை பஜார் பகுதியில், இரண்டு ஆண்டுகளாக மேம்பால பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. போக்குவரத்து நெரிசலால், 2 கி.மீ., வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது. இதனால், படப்பை பஜாரை கடந்து செல்ல ஒரு மணி நேரமாகிறது. நெரிசலில் இருந்து தப்பிக்க, ஒரகடத்தில் இருந்து வண்டலுார் நோக்கி செல்லும் வாகனங்கள், படப்பை ஆதனஞ்சேரி சர்ச் அருகே இடதுபுறம் திரும்பி, எம்.ஜி.ஆர்.,தெரு, சண்முக நகர் விரிவாக்கம் வழியாக, பி.டி.ஒ., அலுவலக சாலையை பிடித்து, வலது புறம் திரும்பி, மீண்டும் படப்பை பஜார் வழியே வண்டலுார் நோக்கி செல்கின்றன. பெரும்பாலான வாகனங்கள், ஆதனஞ்சேரி குடியிருப்பு தெருக்களில் புகுந்து செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது. குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்ப அச்சமாக உள்ளது. பள்ளிக்கு குழந்தைகளை சைக்கிளில் அனுப்பவும் அச்சமாக உள்ளது. குடியிருப்பு தெருக்களில் கார், வேன், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதை, போலீசார் தடுக்க வேண்டும். படப்பை மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை