உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காஷ்மீர் கலாசார பரிமாற்ற நிகழ்ச்சி துவக்கம்

காஷ்மீர் கலாசார பரிமாற்ற நிகழ்ச்சி துவக்கம்

சென்னை, மத்திய உள்துறை அமைச்சகம், கலாசாரம் கல்வி இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகங்களுடன் இணைந்து, ஜம்மு - காஷ்மீர் இளைஞர்களின் கலைத்திறன், கலாசாரத்தை, இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கலாசார பரிமாற்ற நிகழ்ச்சி, அடையாறு, இளைஞர் விடுதியில் நேற்று துவங்கியது.இதை, தென்சென்னை எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதில், தமிழக வேளாண்மைத் துறை கூடுதல் செயலர் பிரகாஷ் கோவிந்தசாமி, ஐ.பி.எஸ்., அதிகாரி சாமுண்டீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.வரும், 15ம் தேதி வரை, காஷ்மீர் இளைஞர்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.நேரு யுவகேந்திராவின் தமிழகம் மற்றும் புதுச்சேரி இயக்குனர் செந்தில்குமார் கூறியதாவது:காஷ்மீர் பள்ளத்தாக்குகளை சேர்ந்த, அனந்தநாக், குப்வாரா, பாரமுல்லா, புத்காம், ஸ்ரீநகர், புல்வாமா ஆகிய, ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த, 132 பேர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இவர்களை, ராணுவம் தேர்வு செய்து அனுப்பியது.இவர்களுக்கு, திறன்மேம்பாட்டு பயிற்சி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் தயாரிப்புகளின் கண்காட்சி, தமிழகம், காஷ்மீர் உணவுகளை பரிமாறும் உணவு திருவிழா, பழக்க வழக்கங்கள், மொழி அறிவு, கலாசாரம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை