உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகளிர் இலவச பஸ் பயணம் பயனாளிகள் அதிகரிப்பு

மகளிர் இலவச பஸ் பயணம் பயனாளிகள் அதிகரிப்பு

சென்னை, பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டத்தில், பயன்பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.கடந்த 2021 மே மாதம், பெண்கள் இலவச பஸ் பயண திட்டத்தை, தமிழக அரசு அமல்படுத்தியது. இந்த திட்டத்தில், பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழமான எம்.டி.சி.,யில் மட்டும், இந்தாண்டு ஜூன் வரை, 140.38 கோடி முறை, பெண்கள் பயணித்துள்ளனர். ஜூனில் மட்டும் 3.69 கோடி பெண்கள் பயணித்துள்ளனர்.இது, கடந்த ஆண்டு ஜூன் மாத பயண எண்ணிக்கையைவிட, 22 சதவீதம் அதிகம். தினமும் சராசரியாக, 12.32 லட்சம் பேர் பயணம் செய்து வருவதாக, எம்.டி.சி., தெரிவித்துள்ளது.

நிதியுதவி

மாநகர போக்குவரத்துக் கழகத்தில், பணியின்போது இறந்த, எட்டு பேரின் குடும்பத்தினருக்கு, அனைத்து பணியாளர்கள் சார்பில் உதவித் தொகையாக, 45 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை