உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் உதிரி பாகங்கள் திருட்டு அதிகரிப்பு

இருசக்கர வாகனத்தில் பெட்ரோல் உதிரி பாகங்கள் திருட்டு அதிகரிப்பு

நங்கநல்லுார், செப். 3- நங்கநல்லுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இரவு நேரத்தில், இருசக்கர வாகனங்களில் பெட்ரோல் மற்றும் உதிரி பாகங்களை திருடும் கும்பலின் அட்டகாசம், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பழவந்தாங்கல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட நங்கநல்லுார், ஹிந்து காலனி, டி.என்.ஜி.ஓ., காலனி, அய்யப்பா நகர், வோல்டாஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளில், சமீப காலமாக, இரவு நேரத்தில் வீடுகளில் நிறுத்தப்பட்டுள்ள இருசக்கர வாகனங்களில் இருந்து, பெட்ரோல் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது. மேலும், வாகனங்களில் இருந்து பேட்டரி, கார்ப்பரேட்டர், ஹெட்லைட் போன்றவற்றை உடைத்து, 'ஹாலோஜன் பல்பு'கள், கண்ணாடிகள் உள்ளிட்ட உதிரி பாகங்கள் திருடப்படுகின்றன. வாகனங்களையும் சேதப்படுத்தி செல்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீசார், ரோந்து பணியை தீவிரப்படுத்தி, இந்த திருட்டு கும்பலை கைது செய்ய வேண்டும் என, குடியிருப்போர் நலச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை