ஹிண்டன் ஏர்போர்ட்டிற்கு பறக்கிறது இண்டிகோ
சென்னை, சென்னையில் இருந்து ஹிண்டன் விமான நிலையத்திற்கு விமான சேவையை, 'இண்டிகோ' நிறுவனம் ஜூலையில் துவக்க உள்ளது.உத்தர பிரதேச மாநிலத்தின் காசியாபாத் நகரத்தில் ஹிண்டன் விமான நிலையம் அமைந்துள்ளது. 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' விமான நிறுவனம், ஹிண்டனுக்கு தினசரி விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில், இண்டிகோ நிறுவனம் சென்னையில் இருந்து ஜூலை 20ம் தேதி ஹிண்டனுக்கு விமான சேவை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.★ சென்னையில் இருந்து பகல் 12:05 மணிக்கு புறப்படும் விமானம், பிற்பகல் 2:50 மணிக்கு ஹிண்டன் சென்றடையும்.★ ஹிண்டனில் இருந்து பிற்பகல் 3:40 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 6:20 மணிக்கு சென்னை வந்தடையும். கூடுதல் விபரங்களுக்கு goindigo.inஎன்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.