உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நந்தா பொறியியல் கல்லுாரிகளில் தொழில்துறை கலந்துரையாடல்

நந்தா பொறியியல் கல்லுாரிகளில் தொழில்துறை கலந்துரையாடல்

ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரிகளில், இறுதியாண்டு முடித்து வெளியேறும் மாணவர்களுக்கு, மும்பை டாடா கன்ஸ்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் சார்பில், தொழில்துறை கலந்துரையாடல் நடந்தது.ஸ்ரீநந்தா அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். டாடா கன்ஸ்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி பிராந்திய தலைவர் கணேஷ் திருநாவுக்கரசு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால் முன்னிலை வகித்தனர். கல்லுாரி மாணவ, மாணவியருடன், சிறப்பு விருந்தினர் கலந்துரையாடினார். இதில், 540க்கும் மேற்பட்ட மாணவர், உதவி பேராசிரியர் மற்றும் பேராசரியர்கள் கலந்து கொண்டனர்.இதற்கு ஏற்பாடு செய்த, பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு துறை வேலை வாய்ப்பு அலுவலர்களை, ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், நந்தா தொழில்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை