உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வார்டு பணிகள் கவுன்சிலருக்கு தெரிவியுங்கள் வார்டில் நடைபெறும் பணிகள் கவுன்சிலருக்கு தெரிவியுங்கள்

வார்டு பணிகள் கவுன்சிலருக்கு தெரிவியுங்கள் வார்டில் நடைபெறும் பணிகள் கவுன்சிலருக்கு தெரிவியுங்கள்

சென்னை, 'வார்டுகளில் நடைபெறும் பணிகள் குறித்து, அந்தந்த கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்' என, மேயர் பிரியா உத்தரவிட்டுள்ளார்.தங்களது வார்டுகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து, அதிகாரிகள் எங்களுக்கு தெரிவிப்பதில்லை. இளநிலை பொறியாளர்களும் எங்களுக்கு தெரிவிக்க மறுக்கின்றனர். இதனால், என்னென்ன பணிகள் நடைபெறுகிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை என, மாதாந்திர கவுன்சில் கூட்டத்தில் கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டினர்.இதைத்தொடர்ந்து, அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் இளநிலை பொறியாளர்களுக்கு, மாநகராட்சி மேயர் பிரியா சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், 'வார்டுகளில் நடைபெறும் அனைத்து வளர்ச்சி பணிகள் குறித்தும், கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்துதல் அவசியம். அப்போது தான், அப்பணிகளை கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும். பணிகள் தொய்வில்லாமல் நடைபெறுவதற்கும் வழிவகுக்கும்' என, குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்