மேலும் செய்திகள்
இளைஞர் கொலை விவகாரம்; பெண் உட்பட 3 பேர் கைது
10-Jul-2025
சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியரிடம் மொபைல் போன்கள் திருடியவரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சஞ்சய் 17. இவர் உயர்படிப்பு குறித்து ஆலோசனை பெற, தன் பெற்றோருடன் ஏற்காடு விரைவு ரயிலில் சென்னை சென்ட்ரல் நிலையத்துக்கு, நேற்று முன்தினம் அதிகாலையில் வந்தார். காத்திருப்போர் அறையில் பெற்றோருடன் அமர்ந்திருந்தார். அப்போது, சஞ்சய் அருகே அமர்ந்திருந்த நபர், சஞ்சயின் மொபைல்போனை திருடி தப்பினார். இது குறித்த புகாரை அடுத்து, கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அரிசிபாளையத்தைச் சேர்ந்த விஜய் ஆனந்த், 40, எனவும், பயணியரிடம் மொபைல்போன் திருடியதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, இரண்டு மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.
10-Jul-2025