உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மணலியில் ரூ.5 கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்

மணலியில் ரூ.5 கோடியில் திட்டப்பணிகள் துவக்கம்

மணலிமணலியில், 5.36 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் துவக்கி வைக்கப்பட்டன.சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம், 21வது வார்டு, பாடசாலை தெருவில், மாநகராட்சி துவக்கப் பள்ளி செயல்படுகிறது. இங்கு, 800க்கும் அதிகமான மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கட்டடம் பழுது மற்றும் இடப்பற்றாக்குறை நிலவி வந்தது.தீர்வாக, எண்ணுார் காமராஜர் துறைமுகத்தின், சமூக மேம்பாட்டு நிதி - சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 1.90 கோடி ரூபாயில், நவீன ஒப்பனையறையுடன் கூடிய ஆறு வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.அதன் திறப்பு விழா, நேற்று காலை நடந்தது. இதில், வடசென்னை எம்.பி., கலாநிதி, எம்.எல்.ஏ.,க்கள் கே.பி சங்கர், சுதர்சனம், மண்டல குழு தலைவர் ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று, புதிய கட்டடத்தை திறந்து வைத்தனர்.சி.பி.சி.எல்., நிறுவனத்தில் சமூக மேம்பாட்டு நிதி மற்றும் சென்னை மாநகராட்சியுடன் இணைந்து, நமக்கு நாமே திட்டத்தின் கீழ், மணலி பாடசாலை தெருவில் இயங்கி வரும், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், நவீன ஒப்பனை அறையுடன் கூடிய ஆறு வகுப்பறை கட்டடங்கள், 2.40 கோடி ரூபாயில் கட்டப்பட உள்ளது.மணலி, தேவராஜன் தெரு மற்றும் நாமக்கார முனியன் தெருவில், 66 லட்ச ரூபாய் செலவில், புதிய அங்கன்வாடி மைய கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இதற்கான பூமி பூஜையும் போடப்பட்டது.தவிர, 20வது வார்டு, சின்னமாத்துார் சாலை, மணலி ஏரிக்கரையில், 40 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, உடற்பயிற்சி கூடமும் திறந்து வைக்கப்பட்டது. அதன்படி, மணலி முழுதும், 5.36 கோடி ரூபாயிலான திட்டப்பணிகள் துவங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ்சேகர், மண்டல உதவி கமிஷனர் கோவிந்தராசு, செயற்பொறியாளர் தேவேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை