மாடுகள் திருடு போவது தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் பேட்டி :
மாடுகள் அடிக்கடி திருடு போவது குறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கூறியதாவது :ஆவடி அடுத்த திருமுல்லைவாயிலில், கடந்த மே மாதம், காளை மாடு ஒன்று திருடு போனது. அது தொடர்பான புகாரில், மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து, வேறு எந்த புகாரும் வரவில்லை. மாடுகள் அடிக்கடி திருடு போவது குறித்து புகார்கள் வந்தால், உடனடியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.