உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுமி மீதான வன்முறை வழக்கு விசாரணை அறிக்கை தாக்கல்

சிறுமி மீதான வன்முறை வழக்கு விசாரணை அறிக்கை தாக்கல்

சென்னை, அண்ணாநகரில், 10 வயது சிறுமி, பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து, அங்குள்ள மகளிர் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க பெற்றோர் சென்றனர். அவர்களை, போலீசார் தாக்கியதாக செய்தி வெளியானது. இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிய உத்தரவுக்கு தடை விதித்து, சென்னை மாநகர போலீஸ் இணை ஆணையர் சரோஜ்குமார் தாக்கூர் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைத்து விசாரிக்கவும், விசாரணை அறிக்கையை வாரந்தோறும் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, வழக்கு, நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், சி.குமரப்பன் அடங்கிய அமர்வில், விசாரணைக்கு வந்தது. சிறப்பு புலனாய்வுக்குழுவின் விசாரணை அறிக்கை, சீலிட்ட உறையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. புலன்விசாரணை முடியும் நிலையில் உள்ளதாகவும், விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதாகவும், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, இறுதி அறிக்கையை உரிய நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 8ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ