உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சேவை மைய பணியில் சேர அழைப்பு

சேவை மைய பணியில் சேர அழைப்பு

சென்னை, சென்னையில் செயல்படும் பெண்களுக்கான சேவை மையத்தில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக, சென்னை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.இந்த மையத்தில் காலியாக உள்ள, வழக்கு பணியாளர் இடத்திற்கு, சமூக பணியில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு பாதுகாப்பாளர் மற்றும் இரண்டு பன்முக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களும் காலியாக உள்ளன.விருப்பமுள்ளவர்கள், https://chennai.nic.in/ என்ற இணையத்தில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, டிச., 6 மாலை, 5:00 மணிக்குள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும், மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரடியாகவோ, gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கோ விண்ணப்பிக்கலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை