கந்தன்சாவடி தனியார் விடுதிக்கு குடிநீர் இணைப்பில் முறைகேடு
கந்தன்சாவடி :பெருங்குடி மண்டலம், வார்டு 182க்கு உட்பட்டது கந்தன்சாவடி. இங்கு, சந்தோஷ் நகர் பிரதான சாலையில், தனியார் விடுதி அமைந்துள்ளது.இந்நிலையில், வீடுகளின் குடிநீர் இணைப்பிற்கு அரை அங்குலம் குழாய் பயன்படுத்துவது தான் வழக்கம். ஆனால், குறிப்பிட்ட விடுதிக்கு, ஒரு அங்குல குழாயில் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது: குறிப்பிட்ட விடுதியில் மட்டும், இம்முறைகேடு நடப்பதில்லை. இங்குள்ள குடியிருப்புகள் பலவற்றில், இணைப்பு குழாயில் மோட்டார் இணைத்து, அதன் வாயிலாக நீரை உறிஞ்சி எடுக்கின்றனர்.இதனால், பகுதிவாசிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், குறிப்பிட்ட விடுதியின் மீதும், முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் குடியிருப்புவாசிகள் மீதும் நடவடிக்கை எடுத்து, பகுதிவாசிகளுக்கு போதிய குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.