உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெள்ளத்தில் தத்தளிக்க போகுதா சென்னை?

வெள்ளத்தில் தத்தளிக்க போகுதா சென்னை?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னையில் நேற்று பெய்த சாதாரண மழைக்கே, பல்வேறு இடங்களிலும் வெள்ளக்காடானது. மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பழுது, அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணிகள், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை என, நாலாபுறமும் பிரச்னைகளால் மாநகராட்சி திணறி வருகிறது. பருவமழை துவங்க உள்ள நிலையில், முன்பு போல சென்னை தத்தளித்து விடுமோ என, மக்கள் பீதியில் உள்ளனர்.சென்னை மாநகராட்சியில், 3,040 கி.மீ., நீளத்துக்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், உலக வங்கி, ஜப்பான் வளர்ச்சி நிதி உள்ளிட்டவற்றின் வாயிலாக மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது.இத்துடன், 'கோர் சிட்டி' எனப்படும் பழைய சென்னை பகுதிகளில், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மழைநீர் வடிகால் அகற்றப்பட்டு, புதிய வடிகால் அமைக்கும் பணி சில பகுதிகளில் நடந்து வருகிறது.மேலும், பிரதான சாலைக்கு உட்புற சாலைக்குமான இணைப்புகள் இல்லாத பகுதிகளிலும், மாநகராட்சி மழைநீர் வடிகால் இணைப்புகள் ஏற்படுத்தி வருகின்றன.ஒவ்வொரு ஆண்டும் மழைநீர் வடிகால் கட்டமைப்புக்கு, சென்னை மாநகராட்சி குறைந்தது, 300 கோடி முதல் 1,000 கோடி ரூபாய் வரை செலவிட்டு வருகிறது.இவ்வளவு கோடி ரூபாயில் பணிகள் நடந்தாலும், ஒவ்வொரு பருவமழைக்கும் சென்னையில் ஏதேனும் ஒருபகுதியில் மக்கள் வெள்ளத்தில், ஒருவாரம் வரை சிக்கி தவிக்கின்றனர்.அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.ஆனால், நேற்று அதிகாலையில் பெய்த மழைக்கே, கோடம்பாக்கம், அம்பத்துார், அண்ணாநகர் என, பல மண்டலங்களில் தெருக்களில் மழைநீர் தேங்கியது. மந்தைவெளி பஸ் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது. சில இடங்களில், ஒரு அடிக்கு மேல் மழைநீர் தேங்கி, அப்பகுதி மக்களை பாதிப்படைய செய்துள்ளது.நேற்று ஒரே நாளில் மட்டும், மாநகராட்சியின் 1913 என்ற புகார் எண்ணிக்கு, 10க்கும் மேற்பட்ட இடங்களில் மழைநீர் தேங்கியதாக புகார்கள் பெறப்பட்டுள்ளன.தொடர்ந்து ஓரிரு நாட்கள் மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், சென்னையில் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.காரணம் என்ன? மெட்ரோ ரயில் பணிகளால் சாலைகள் பழுது, அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணிகள், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இன்மை என, நாலாபுறமும் பிரச்னைகள் உள்ளதால், மாநகராட்சி செய்வதறியாமல் திணறி வருகிறது.அடுத்த மாத இறுதியில் வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கடந்த 2015ல் போல் சென்னை மீண்டும் தத்தளித்து விடுமோ என, மக்கள் பீதியில் உள்ளனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மாநகராட்சி வேகப்படுத்த வேண்டும் என, வலியுறுத்தி உள்ளனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னை நகரம் சமதளப் பகுதியாக கொண்டிருப்பதால், மழைநீர் இயல்பாகவே தானாக வடிய வழியின்றி, தாழ்வான பகுதிகளில் தேங்கி விடுகிறது. இதற்காக அனைத்து பகுதிகளிலும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது.ஆனால், நெடுஞ்சாலை துறையின் மேம்பால பணி, மெட்ரோ ரயில் பணி உள்ளிட்டவற்றால், அண்ணா சாலை, ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகளில் மழைநீர் வடிகால் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது.இதன் வாயிலாகவும் அதிகளவு மழை பொழிவு இருக்கும்போது, வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.நேற்று அதிகாலையில் கனமழை பெய்தது. சில இடங்களில் வடிகால்களில் குப்பை தேங்கி அடைப்பை ஏற்படுத்தியதால், சில தெருக்களில் மழைநீர் தேங்கியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.மழை காலங்களில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக, அனைத்து மின் இணைப்பு பெட்டி, டிரான்ஸ்பார்மர் ஆகிய பகுதிகளில், பாதுகாப்பு தடுப்பு வேலிகளை மாநகராட்சி அமைத்து வருகிறது. தாழ்வாக தொங்கும் மின்கம்பிகள் கண்டறிந்து தீர்வு காணப்படும்.மழை வெள்ள பாதிப்பை தடுக்க பல்வேறு சவால்கள் இருந்தாலும், தொடர்ந்து மாநகராட்சி பணியாளர்கள், 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். நீர் தேக்கத்தை தடுக்க, 500க்கும் மேற்பட்ட மோட்டார்கள் பயன்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர். கடவுளை நம்புவோம் மழைக்கால பாதிப் பை தடுப்பது தொடர்பான ஆய்வு கூட்டம், மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் சமீபத்தில் நடந்தது. அதில், மேயர், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். தென்மேற்கு பருவ மழை அதிகம் பெய்தது, வடகிழக்கு பருவமழையும் அதிகம் பெய்தால், எப்படி சமாளிப்பது என ஆலோசிக்கப்பட்டது. அப்போது, 'சட்டசபை தேர்தல் வர உள்ளது. வெள்ள பாதிப்பு இல்லாமல் இருக்க வேண்டும். தற்போதைய சூழலில், கடவுளையும், கடலையும் நம்புவதை தவிர வேறு ஏதும் வழியில்லை' என, உயர் அதிகாரிகள், மேயர் முன்னிலையில் புலம்பி தீர்த்துள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Svs Yaadum oore
ஆக 23, 2025 08:55

கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் பலி ..... 12 வயதில் பெண் குழந்தையும் 10 வயதில் ஆண் குழந்தையும் உள்ளார்கள். வீட்டின் ஒரே சம்பாதிக்கும் நபர் வேறு.....கண்ணகி நகர் 11வது குறுக்கு தெருவில் மின்சார கேபிள்கள் சாலை மேல் செல்வதாகவும் அபாயகரமாக உள்ளதாகவும் அங்கு இருக்கும் மக்கள் பலமுறை மின்சார வாரியத்திற்கு புகார் .ஒரு நடவடிக்கையும் கிடையாது ....இந்த விடியல் ஆட்சியில் இன்னும் மேலும் பல அசம்பாவிதங்கள் நடக்கும் ..மொத்தமும் விடியல் லஞ்ச ஊழல் கள்ள சாராயம் போதை ...


Svs Yaadum oore
ஆக 23, 2025 08:10

விடியல் ஆட்சியின் லட்சணம் .....கண்ணகி நகரில் மின்கம்பி அறுந்து விழுந்தது தெரியாமல் மழை நீரில் கால் வைத்த தூய்மை பணியாளர் பலி ..... காலையில் வேலைக்கு சென்ற வரலட்சுமி சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை....


Svs Yaadum oore
ஆக 23, 2025 08:06

மும்பை மழையில் இருபத்தைந்து பேருக்கும் மேல் இறந்து விட்டனர் என்று படிக்காத திராவிடனுங்க புரளி .....100 ஆண்டுகள் சாதனை மழையில் மகாராஷ்டிரம் முழுக்க இறந்தவர் எண்ணிக்கை 27.....சென்னையில் ரெண்டு மணி நேரம் பெய்த மழையில் தூய்மை பணியாளர் உயிரிழப்பு .....


Padmasridharan
ஆக 23, 2025 07:42

சின்ன சின்ன தெருக்களும் மேடு பள்ளங்களென்று தோண்டி தோண்டி மூடி வைத்திருக்கின்றனர். பல இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு எவ்வாறு கஷ்டப்படுகிறார்களென்று கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். வண்டிகளுக்கு கொடுக்கின்ற மரியாதை நடப்பவர்களுக்கும் மிதி வண்டிகளில் செல்பவர்களுக்கும் இல்லாமல் போய்விட்டது சாமி .


venugopal s
ஆக 23, 2025 07:36

ஒரு அளவுக்கு மேல் மழை பெய்தால் எந்த நகரமாக இருந்தாலும் பாதிப்பு அதிகமாகத் தான் இருக்கும், அதை ஒன்றும் செய்ய முடியாது. கடந்த வாரம் மும்பை மழையில் இருபத்தைந்து பேருக்கும் மேல் இறந்து விட்டனர்.


Jack
ஆக 23, 2025 15:40

200க்கு இவ்வளவு தான் முட்டு கொடுக்க முடியும்


Svs Yaadum oore
ஆக 23, 2025 06:50

சென்னை நகரம் சமதளப் பகுதியாக கொண்டிருப்பதால், மழைநீர் தாழ்வான பகுதிகளில் தேங்கி விடுகிறதாம் . இதற்காக அனைத்து பகுதிகளிலும், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு உள்ளது....ஆனால், நெடுஞ்சாலை துறையின் மேம்பால பணி, மெட்ரோ ரயில் பணி , அரைகுறையாக விடப்பட்ட வடிகால்வாய் பணிகள், தாழ்வாக தொங்கும் மின் கம்பிகள் என்று ஆயிரம் பிரச்னையாம் .....அனால் ஆயிரம் கோடிகள் திராவிட லஞ்ச ஊழலில் இப்படித்தான் நடக்கும் ...


Svs Yaadum oore
ஆக 23, 2025 06:45

தற்போதைய சூழலில், கடவுளையும், கடலையும் நம்புவதை தவிர வேறு ஏதும் வழியில்லை என, உயர் அதிகாரிகள், மேயர் முன்னிலையில் புலம்பி தீர்த்துள்ளனராம் ....இவனுங்களுக்கு லட்சணக்கில் சம்பளம் , கோடிக்கணக்கில் கிம்பளம் ....இப்படி வெட்கம் கெட்டு புலம்புவதற்கு பதில் ராஜினாமா செய்து விட்டு மானத்தோடு வாழலாம் ...ஆனால் அது இவனுங்களுக்கு எப்போதும் இருந்தது கிடையாது ..


Svs Yaadum oore
ஆக 23, 2025 06:42

மும்பை நகரில் மட்டும் 8 மணிநேரத்தில் 177 மிமீ மழை... இதன்மூலம் 100 ஆண்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.. ஆனால் இரெண்டு நாட்களில் மும்பை சகஜ நிலைமைக்கு திரும்பும் ....இதுவே விடியல் ஆட்சி செய்யும் சென்னையில் இப்படி மழை பெய்தால் மீண்டும் ரோட்டில் நடமாடவே ஒரு மாதம் ஆகும் .... அதற்குள் சாலை குழி விபத்தில் அல்லது ரோடு பள்ளத்தில் மின்சாரம் கசிந்து 10 பேர் இறந்திருப்பார் ..நேற்று பெய்த மழைக்கே சென்னை நகரம் வெள்ளக்காடு ..இது வரலாறு காணாத மழை ஒன்றும் செய்ய முடியாது என்று இதுக்கு மூட்டு கொடுத்தார்....


முருகன்
ஆக 23, 2025 06:37

தமிழகத்தில் என்றால் அரசு மீது குறை டில்லி மும்பை என்றால் தீடிர் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு


Jack
ஆக 23, 2025 06:54

மற்ற நகரங்களில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்படவில்லை .சென்னை நகரில் இருக்கும் ஏரிகளின் குரல்வளை நெறிக்கப்பட்டுள்ளது


Modisha
ஆக 23, 2025 07:12

அதிமுக ஆட்சியில் இளம் விதவைகள் பற்றி பேசிய கனிமொழி இப்போ என்ன சொல்றாங்க ?


Svs Yaadum oore
ஆக 23, 2025 07:13

மும்பை நகரில் மட்டும் சென்ற வாரம் 8 மணிநேரத்தில் 177 மிமீ மழை... இதன்மூலம் 100 ஆண்டுகள் சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.. ஆனால் இரெண்டு நாட்களில் மும்பை சகஜ நிலைமைக்கு திரும்பும் ..


vivek
ஆக 23, 2025 07:16

4000கோடி ஆட்டைய போட்டா கேப்பாங்க


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஆக 23, 2025 06:31

பாஸ் இது ஒன்றிய ஆட்சியின் சதி, தேனும் பாலும் ஓடும் விடியலின் ஆட்சி கண்டு மோடி பொறாமை, 4000 கோடி ல எல்லாம் கட்டி இருக்கு, சென்னை தீயமுகவின் இதய துடிப்பு, அதை நிறுத்த அமிட்ஸ் செய்யும் சதி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை