மேலும் செய்திகள்
இரும்பு கம்பியால் தாக்கி தந்தையை கொன்ற மகன்
25-Sep-2025
சிட்லப்பாக்கம், திருமணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தந்தையை ஐ.டி., ஊழியரான மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. குரோம்பேட்டை, கணபதிபுரம், முனுசாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 76. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி பெங்களூரில் வசிக்கிறார். மகன் நிரோஷன், 41, பெங்களூரில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில், பொறியாளராக பணிபுரிந்து வந்தார். மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. பெங்களூருவில் இருந்து, நேற்று வீட்டிற்கு வந்த நிரோஷன், கூரியர் வந்திருப்பதாக கூறி தாயை வெளியே அனுப்பிவிட்டு, கத்தியால், தந்தை சிவலிங்கத்தை குத்தி கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த சிட்லப்பாக்கம் போலீசார், நிரோஷனை கைது செய்து விசாரிக் கின்றனர். இது குறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது: நிரோஷனுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்துள்ளனர். ஒரு பெண்ணை பார்த்து முடிவு செய்து, விரைவில் நிச்சயதார்த்தம் செய்ய திட்டமிட்டிருந்தனர். இதற்கிடையில், அப்பெண், தன் காதலனுடன் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டி மகனை சிவலிங்கம் திட்டியுள்ளார். தந்தை திட்டியது, நிரோஷன் மனதில் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலை, பெங்களூருவில் இருந்து பேருந்து மூலம் வீட்டிற்கு வந்த நிரோஷன், கூரியர் வந்திருப்பதாக கூறி, தாயை வெளியே அனுப்பிவிட்டு, கத்தியை எடுத்து கட்டிலில் படுத்திருந்த தந்தையின் வயிற்றில் மூன்று முறை குத்தியுள்ளார். பின், ஹாலில் வந்து அமர்ந்துள்ளார். இதற்கிடையில் கூரியர் எதுவும் வராததால், அவரது தாய் வீட்டிற்கு வந்தபோது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை பார்த்து தட்டியுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வந்து, கதவை உடைக்க முயற்சித்த போது, நிரோஷன் கதவை திறந்துள்ளார். பின், உள்ளே சென்று பார்த்தபோது, சிவலிங்கம் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இவ்வாறு போலீசார் கூறினர்.
25-Sep-2025