தற்காலிக கொடி கம்பங்களுக்கு அனுமதி பெறுவது கட்டாயம்
சென்னை: 'சென்னையில் தற்காலிக கொடி கம்பங்கள் அமைக்கவும் அனுமதி பெறுவது கட்டாயம்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னையில் கூட்டங்கள், தேர்தல் பரப்புரைகள், கருத்தரங்குகள், ஊர்வலங்கள், தர்ணா, பண்டிகைகள் போன்ற சிறப்பு நிகழ்வுகளுக்காக, தற்காலிக கொடி கம்பங்கள் நடப்படுகின்றன. இனி, தற்காலிக கொடி கம்பங்கள் நட வேண்டுமெனில், பேரிடர் மேலாண்மைத்துறையின் வழிகாட்டு நெறிமுறையை பின்பற்றி, முன் அனுமதி பெற வேண்டும். முன் அனுமதி பெறாமல் நடப்படும் தற்காலிக கொடி கம்பங்கள், முன் அறிவிப்புமின்றி அகற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.