உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சாலையில் கிடந்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

 சாலையில் கிடந்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நங்கநல்லுார்: வ. 23-: சாலையில் தவற விட்ட, 2 சவரன் தங்கச் சங்கிலியை, காவல் துறை வாயிலாக உரியவரிடம் ஒப்படைத்த ஜே.சி.பி., ஆப்பரேட்டருக்கு பாராட்டு குவிகிறது. பழவந்தாங்கல், பர்மா தமிழர் காலனி, மூன்றாவது தெருவை சேர்ந்தவர் தரணி, 51; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். நேற்று முன்தினம் இரவு, நங்கநல்லுார், எம்.ஜி.ஆர்., சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையில், 2 சவரன் தங்கச்சங்கிலி கிடந்தது. அதை எடுத்து பழவந்தாங்கல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனிடையே, அதே பகுதியை சேர்ந்த ஹாஜிமுகமது என்பவர், தன் மனைவியின் நகை தவறிவிட்டதாக, காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ரங்கநாதன், ஹாஜிமுகமது மனைவியை அழைத்து, நகை குறித்த அடையாளம் பெற்று, உறுதி செய்த பின், நகையை ஒப்படைத்தார். இதையடுத்து, தரணிக்கு ஹாஜிமுகமது குடும்பத்தினர், காவல் துறையினர் நன்றி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்