மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
14-Jan-2025
செங்குன்றம், செங்குன்றத்தை அடுத்த சாமியார் மடத்தை சேர்ந்தவர் அம்சவல்லி, 65; பூ வியாபாரி. இவர், இரண்டு நாட்களுக்கு முன், வீட்டை பூட்டி விட்டு, நெற்குன்றத்தில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதிர்ச்சியடைந்த அம்சவல்லி, உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த, 10 சவரன் தங்க நகை, 1.30 லட்ச ரூபாய் திருடு போயிருந்தது. செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14-Jan-2025