கபடி போட்டி அட்டவணை மாற்றம்
சென்னை: தொடர் மழையால், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கபடி போட்டி ஒத்திவைக்கப்பட்டு, அட்டவணை மாற்றப்பட்டுள்ளது.. பள்ளிக்கல்வித்துறை சார்பில், சென்னை வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள், பல்வேறு மைதானங்களில் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ., காலனி அரசு பள்ளியில் கபடி போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், மழை காரணமாக போட்டிகள் நேற்று (அக்.,22) ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து மழை பெய்ததால், இன்று (அக்.,23) போட்டிகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, வரும் திங்கட்கிழமை முதல் போட்டி அட்டவணையில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.