உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கம்ப ராமாயணம் - கவிதையும் பாடலும்

 கம்ப ராமாயணம் - கவிதையும் பாடலும்

தாம்பரம், சென்னையில் ரேலா மருத்துவமனையின் தலைவர் முகமது ரேலா மற்றும் டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ஆகியோர், கம்ப இராமாயண பாடல் வரிகளை தமிழில் வாசித்து அவற்றுக்கான பொருள் விளக்கத்தை ஆங்கில மொழியில் வழங்க உள்ளனர்.இந்த பாடல் வரிகளை கர்நாடக சங்கீத வடிவில், இசைப்பாடலாக சிக்கில் குருசரண் வழங்க உள்ளார்.'கம்ப இராமாயணம் - கவிதையும் பாடலும்' என்ற இந்த நிகழ்ச்சி, நாளை மாலை 6:00 மணிக்கு சென்னை, ஆழ்வார்பேட்டையில் உள்ள நாரத கான சபா அரங்கில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் கட்டணம் ஏதுமின்றி இந்த நிகழ்சியை கண்டு ரசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை