உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மகளிர் ஜூனியர் கைப்பந்து காஞ்சிபுரம் அணி சாம்பியன்

மகளிர் ஜூனியர் கைப்பந்து காஞ்சிபுரம் அணி சாம்பியன்

சென்னை,தமிழ்நாடு ஹேண்ட்பால் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் ஹேண்ட்பால் சங்கம் சார்பில், மாநில அளவில் மகளிருக்கான ஜூனியர் கைப்பந்து போட்டி, காஞ்சிபுரத்தில் நேற்று நிறைவடைந்தது.போட்டியில், காஞ்சிபுரம், வேலுார், விழுப்புரம் உள்ளிட்ட 20 மாவட்ட அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன.இதில், நேற்று மதியம் நடந்த இறுதிப் போட்டியில், காஞ்சிபுரம் மற்றும் திண்டுக்கல் அணிகள் எதிர்கொண்டன. விறுவிறுப்பான ஆட்டத்தில் 23 - 14 என்ற கணக்கில், காஞ்சிபுரம் மாவட்டம் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வென்றது.முன்னதாக நடந்த மூன்றாம் இடத்திற்கான ஆட்டத்தில், விழுப்புரம் அணி மூன்றாம் இடத்தையும், மதுரை அணி நான்காம் இடத்தையும் பிடித்தன.வெற்றி பெற்ற அணிகளுக்கு, மாநில ஹேண்ட்பால் சங்க செயலர் ராஜசேகர், காஞ்சிபுரம் மாவட்ட ஹேண்ட்பால் சங்க தலைவர் செந்தில் தங்கராஜ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். போட்டியில் வெற்றி பெற்ற அணி, அடுத்த மாதம் பீஹார் மாநிலத்தில் நடக்கும் தேசிய போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை