மேலும் செய்திகள்
காப்பு கட்டி கந்த சஷ்டி விரதம் துவக்கிய பக்தர்கள்
41 minutes ago
சென்னை: சென்னை, பெசன்ட்நகர், கடற்கரையை ஒட்டி முருகப் பெருமானின் அறுபடை வீடு முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா, நேற்று துவங்கி, வரும் 28ம் தேதி வரை நடத்தப்படுகிறது. முதல் நாளான நேற்று காலை முருகப் பெருமானுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்றும் நாளையும் காலை 10:30 மணிக்கு, சண்முகார்ச்சனை நடத்தப்படுகிறது. வரும், 25, 26ம் தேதிகளில் லட்சார்ச்சனை நடக்கிறது. மகா கந்தசஷ்டியான வரும் 27ம் தேதி காலை 9:00 மணிக்கு வேல் மாறல் பாராயணம் நடக்கிறது. மாலை 4:30 மணிக்கு சூரசம்ஹார விழா நடக்கிறது. அன்று இரவு 7:30 மணிக்கு முருகப் பெருமான் வெள்ளி மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 28ம் தேதி மாலை 6:00 மணிக்கு தேவசேனை திருக்கல்யாண மகோத்சவம் நடக்கிறது.
41 minutes ago