1,000 மாணவியருக்கு கராத்தே சீருடை
சென்னை, மாநகராட்சி பள்ளிகளில் கராத்தே பயிற்சி மேற்கொள்ளும், 1,000 மாணவியருக்கு, மேயர் பிரியா சீருடை வழங்கினார்.சென்னை மாநகராட்சி பள்ளி மாணவியருக்கு, கராத்தே விளையாட்டு பயிற்சி, 2024ல் துவங்கப்பட்டது. ஒவ்வொரு பள்ளியிலும், 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும், 50 மாணவியர் தேர்ந்தெடுத்து, வாரத்தில் இரண்டு நாட்களில், 75 நிமிடங்கள் பயிற்சி வழங்கப்படுகிறது.அதன்படி, இந்தாண்டு 1,000 மாணவியருக்கு, நான்கு மாதங்கள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் பங்கேற்கும் மாணவியருக்கு, ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மேயர் பிரியா, கராத்தே பயிற்சிக்கான பிரத்யேக சீருடையை வழங்கினார். துணை மேயர் மகேஷ்குமார், இணை கமிஷனர் விஜயராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.**