மேலும் செய்திகள்
வீடு புகுந்து 20 சவரன் நகை திருட்டு
11-Sep-2025
பெரம்பூர் வீடு புகுந்து 20 சவரன் நகைகள் திருடிய வழக்கில், கர்நாடகாவைச் சேர்ந்த பெண் சிக்கினார். வியாசர்பாடி, காந்திஜி தெருவில் உள்ள வாடகை வீட்டின் கீழ்தளத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் உமா, 36; டெய்லர். கடந்த 10ம் தேதி, உமா மற்றும் அவரது கணவர் வீட்டை பூட்டி வேலைக்கு சென்றனர். மாலை வீடு திரும்பும்போது, பீரோவில் இருந்த 20 சவரன் நகைகள் திருட்டு போயிருந்தன. செம்பியம் போலீசாரின் விசாரணையில், கர்நாடகா மாநிலம், வடக்கு பாரதி நகரைச் சேர்ந்த ஜெயந்தி, 34 என்பவர், திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. பூட்டிய வீடுகளை நோட்டமிட்டு திருடும் இவர், கர்நாடகாவில் இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீசார், தற்போது அவர் நிறை மாத கர்ப்பிணியாக இருப்பதால், அவரிடமிருந்து 7.5 சவரன் நகைகளை மட்டும் மீட்டனர். விரைவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவித்தனர்.
11-Sep-2025