உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன் வாங்க குவிந்த மக்கள் களைகட்டியது காசிமேடு

மீன் வாங்க குவிந்த மக்கள் களைகட்டியது காசிமேடு

காசிமேடு:மீன் வாங்க வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்ததால், நேற்று, காசிமேடு சந்தை களைகட்டியது. காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மக்கள் வெள்ளம் அலைமோதுவது வழக்கம். அந்தவகையில் நேற்றும் அதிகாலை முதலே, என, மீன் வாங்க வியாபாரிகள் மற்றும் மக்கள் அலைமோதினர். நேற்று முன்தினம் நள்ளிரவு முதல், நேற்று காலை வரை விடிய விடிய 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பின. அதேபோல சிறிய ரக பைபர் படகுகளிலும் மீன்கள் விற்பனைக்கு வந்தன. பொதுமக்கள் அதிகாலை முதலே மீன் வகைகள் பேரம் பேசி வாங்கி சென்றதால், படகுகள் வரவர மீன் வகைகள் காலியாகின. இதனால், மீன் விலை சற்று அதிகமாகவே இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி