உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது

ரயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர்கள் கைது

அண்ணா நகர் :ஒடிசாவில் இருந்து சென்னைக்கு, ரயிலில் கஞ்சா கடத்தி வருவதாக, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகர் மதுவிலக்கு போலீசார், பெரம்பூர், ஜமாலியா பேருந்து நிறுத்தம் அருகில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, சந்தேகத்திற்கு இடமான வகையில் பெரிய பார்சலுடன் நின்றிருந்த மூன்று வாலிபர்களை பிடித்து சோதித்தனர். அப்போது, அவர்களிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது.விசாரணையில், கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த ஜனாத், 30, அனஸ், 22, இந்திரஜித், 23, என்பதும், மூவரும் ஒடிசாவுக்கு சுற்றுலா பயணிபோல் சென்று, ரயிலில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரிந்தது.கஞ்சாவை. சென்னையில் உள்ள வியாபாரி ஒருவருக்கு கை மாற்றுவதற்காக நின்றபோது சிக்கினர். மூவரையும் போலீசார் நேற்று அதிகாலை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை