மேலும் செய்திகள்
சாத்துாரில் சேதமடைந்த வேளாண் அலுவலக கட்டடம்
31-Jan-2025
9 பேர் பலியான வழக்கு; விசாரணையில் அதிர்ச்சி
01-Feb-2025
கொரட்டூர், சர்ச் கட்டடம் மாநகராட்சியின் முறையான அனுமதி பெற்றே இடிக்கப்பட்டது. அங்கேயே புதிய சர்ச் கட்டவும் அனுமதி பெற்றுள்ளோம்' என, கொரட்டூர் சி.எஸ்.ஐ., சர்ச் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.கொரட்டூர், வடக்கு நிழற்சாலையில், சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளது. இதன் பழமையான கட்டடத்தை இடித்து அகற்ற, சர்ச் நிர்வாகம் முடிவு செய்தது. முறையான அனுமதி பெறாமல் கட்டடம் இடிக்கப்படுவதாக, சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். போலீசிலும் புகார் அளித்தனர்.இதுகுறித்த செய்தி, இம்மாதம் 1ம் தேதி நம் நாளிதழில் வெளியானது. இந்நிலையில், மாநகராட்சியிடம் அனுமதி பெற்றே, சர்ச் கட்டடம் இடிக்கப்பட்டதாக, சர்ச் கமிட்டி உறுப்பினர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.சர்ச் கமிட்டி தலைவர் எஸ்.தினகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் அளித்துள்ள விளக்க கடிதம்:காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலர், சர்ச் மீது களங்கம் விளைவிக்க முயல்கின்றனர். பழைய சர்ச் இடிப்பில் எந்த விதிமீறலும் இல்லை.சர்ச் கட்டடத்தை இடிக்க, சென்னை மாநகராட்சியிடம் முறையான அனுமதி பெற்றுள்ளோம். பழைய சர்ச் கட்டடத்தை இடிப்பது மட்டுமின்றி, அங்கேயே புதிய சர்ச் கட்டுவதற்கும் அனுமதி பெற்றுள்ளோம். அதற்காக, தற்காலிக கூடாரம் அமைத்து, பணிகள் மேற்கொண்டுள்ளோம். புதிய சர்ச் கட்டி முடிக்கும் வரை, ஆராதனை நடக்கவும் அனுமதி பெறப்பட்டு உள்ளது. எல்லாம் முறைப்படியே நடந்துள்ளது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
31-Jan-2025
01-Feb-2025