உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோயம்பேடு சந்தைக்கு 21ல் விடுமுறை

கோயம்பேடு சந்தைக்கு 21ல் விடுமுறை

கோயம்பேடு: கோயம்பேடு சந்தைக்கு, அக்.,21ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. கோயம்பேடு சந்தைக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் காய்கறி, கனி மற்றும் பூ வரத்து உள்ளது. பல ஆயிரம் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகள் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி பண்டிகை, 20ம் தேதியான நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, கோயம்பேடு காய்கறி சந்தைக்கு, அக்., 21ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக, அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி