கோயம்பேடு அங்காடி பணியால் திட்ட அனுமதி பாதிக்காது: சி.எம்.டி.ஏ.,
சென்னை:'கோயம்பேடு அங்காடி வளாக கண்காணிப்புக்கு அதிகாரிகள் செல்வதால், கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்காது' என, சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார். கோயம்பேடு அங்காடி வளாகத்தில் அடிப்படை வசதிகள் தொடர்பான பணிகளை கண்காணிக்க, 28 அதிகாரிகளுக்கு சி.எம்.டி.ஏ., உத்தரவிட்டது.இதனால் கட்டுமான திட்ட அனுமதி பணிகள் பாதிக்கப்படும் என, கட்டுமான துறையினர் அச்சம் தெரிவித்தனர். இது தொடர்பான செய்தி நமது நாளிதழில், நவ., 9ல் வெளியானது.இது குறித்து சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா வெளியிட் அறிக்கையில், ''கோயம்பேடு அங்காடி வளாக கண்காணிப்புக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரிகள் பட்டியலை பார்த்தால், ஒருவருக்கும் மாதத்தில் இரண்டு முறை மட்டுமே இப்பணி வரும். இதனால், கட்டுமான திட்ட அனுமதி பணிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது,'' என தெரிவித்துள்ளார்.