உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கிருஷ்ணராவ் கோப்பை கபடி காவேரி பள்ளி சாம்பியன்

 கிருஷ்ணராவ் கோப்பை கபடி காவேரி பள்ளி சாம்பியன்

சென்னை: பள்ளிகளுக்கு இடையிலான கபடி போட்டியில், விருகம்பாக்கம் காவேரி பள்ளி சாம்பியன் பட்டத்தை வென்றது. காவேரி பள்ளி சார்பில், ஏ.சி.கிருஷ்ணராவ் கோப்பைக்கான கபடி போட்டி, விருகம்பாக்கம் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து, 18 பள்ளி அணிகள் பங்கேற்றன. முதல் அரையிறுதியில், காவேரி பள்ளி அணி, 45 - 20 என்ற புள்ளிக்கணக்கில், செயின்ட் தாமஸ் பள்ளியை சாய்த்தது. அதேபோல், மற்றொரு அரையிறுதியில், ஸ்பிரிங் பீல்ட் அணி, 46 - 44 என்ற புள்ளிக்கணக்கில் ஆவிச்சி பள்ளியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப்போட்டி, துவக்கம் முதல் கடைசி நிமிடம் வரை, பரபரப்பாக இருந்தது. காவேரி பள்ளி வீரர்கள், தங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடியை சமாளித்து, 45 - 38 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பிரிங் பீல்ட் அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்