உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

வில்லிவாக்கம்,:வரசித்தி விநாயகர் கோவில், மஹா கும்பாபிஷேகம், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், வில்லிவாக்கம், பிள்ளையார் கோவில் தெருவில், வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது.இக்கோவிலில், கடந்த 25ம் தேதி, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், முதல் கால பூஜையுடன், கும்பாபிஷேக விழா துவங்கியது.தொடர்ந்து, நேற்று காலை 8:00 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கலசம் புறப்பட்டு, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இரவு 7:30 மணிக்கு, சுவாமி திருவீதி புறப்பாடும் நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை