உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூலித்தொழிலாளி போக்சோவில் கைது

கூலித்தொழிலாளி போக்சோவில் கைது

புதுவண்ணாரப்பேட்டையில் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி, கடந்த 2ம் தேதி காலை பள்ளிக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பவில்லை. விசாரணையில், சிறுமி செய்த தவறுக்காக, தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் சிறுமி 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதளம் மூலம் பழக்கமான பிராட்வேயைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான, சஞ்சய், 20, என்பவருடன், மூன்று நாட்களாக ஊர் சுற்றித்திரிந்து தெரிய வந்தது. விசாரித்த போலீசார், சிறுமியை கடத்திய வழக்கில் சஞ்சயை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !