ரயிலில் பயணி தவறவிட்ட லேப்டாப் மீட்டு ஒப்படைப்பு
சென்னை: ரயிலில் பயணி தவறவிட் ட 90,000 ரூபாய் மதிப்பிலான 'லேப் டாப்'பை ரயில்வே போலீசார் மீட்டு ஒப்படைத்தனர். கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நேற்று காலை கன்னியாகுமரி விரைவு ரயில் வந்தது. அதில் பயணித்த விபின், 35, என்பவர், தன் 'லேட்டாப்'பை மறந்து வைத்துவிட்டு, இறங்கி சென்றுள்ளார். பின், ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து, ரயில்வே பா துகாப்பு படை இன்ஸ்பெக்டர் செபாஸ்டின், எ ஸ்.ஐ., அன்பு செழியன் ஆகியோர் ரயில்வே அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, அந்த விரைவு ரயில் பராமரிப்பு பணிக்காக சேத்துப்பட்டு பணி ம னைக்கு சென்றாக தெ ரிவித் தனர். இதையடுத்து, பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு, விபின் பயணம் செய்த இருக்கையில் சோத னை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அங்கு லேப்டாப் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, புகார் அளித்த விபினை வரவழைத்து, லேப்டாப் ஒப்படைக்கப்பட்டது. ஒப்படைக்கப்பட்ட லேப்டாப் மதிப்பு 90,000 ரூபாய். புகார் அளித்த சில மணி நேரங்களில், லேப்டாப்பை மீட்டு கொடுத்த ரயில்வே போலீசாருக்கு, விபின் நன்றி தெரிவித்தார்.