உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சட்ட கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

சட்ட கல்லுாரி மாணவர்கள் போராட்டம்

பெருங்குடி, சென்னை, பெருங்குடி, அம்பேத்கர் சட்டக் கல்லுாரியில் பயின்ற முன்னாள் மாணவர் முத்துராஜா, 24 என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெறுகிறார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், கடந்த டிச., 21 அன்று, அருள்குமரன் என்பவரின் பாஸ்போர்ட் புதுபிப்பிற்காக, தஞ்சை மாவட்டம், சாக்கோட்டை காவல் நிலையம் சென்றார்.அப்போது பணியில் இருந்த தலைமைக் காவலர் செல்வராஜ், முத்துராஜாவிடம் தரக்குறைவாக பேசியதாகவும், முத்துராஜாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தன் புகார்மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கறிஞர் முத்துராஜா மற்றும் தரமணி சட்டக் கல்லுாரி மாணவர்கள், அம்பேத்கர் சட்டக் கல்லுாரி வாயிலில் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை பேச்சுவார்த்தைக்கு பின் அனைவரும் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்