உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லீக் கம் நாக் அவுட் கிரிக்கெட் சென்னை மாஸ் ரைடர்ஸ் அபாரம்

லீக் கம் நாக் அவுட் கிரிக்கெட் சென்னை மாஸ் ரைடர்ஸ் அபாரம்

சென்னை, புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், லீக் கம் நாக் அவுட் கிரிக்கெட் போட்டிகள், சென்னையில் நடந்து வருகிறது.இதில், ஒன்பது அணிகள், தலா எட்டு போட்டிகள் வீதம், 'லீக்' முறையில் மோதி வருகின்றன. போட்டியில் தேர்வாகும் நான்கு அணிகள், 'நாக் அவுட்' சுற்றுக்கு தகுதி பெறும்.அதன்படி, லீக் ஆட்டம் ஒன்று, சேத்துப்பட்டில் நடந்தது. அதில், சென்னை மாஸ் ரைடர்ஸ் சி.சி., மற்றும் செவன் ஸ்டார் சி.சி., அணிகள் எதிர்கொண்டன.'டாஸ்' வென்ற சென்னை மாஸ் ரைடர்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்து, 24.5 ஓவர்களில், எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு, 197 ரன்களை அடித்தது.அடுத்து பேட்டிங் செய்த செவன் ஸ்டார் சி.சி., அணி, 25 ஓவர்கள் முழுமையாக விளையாடி, எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு, 173 ரன்களை அடித்து போராடி தோல்வியடைந்தது. இதனால், 24 ரன்கள் வித்தியாசத்தில், சென்னை மாஸ் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை