உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செம்பரம்பாக்கம் குழாயில் கசிவு ஆற்காடு சாலையில் தேங்கிய குடிநீர்

செம்பரம்பாக்கம் குழாயில் கசிவு ஆற்காடு சாலையில் தேங்கிய குடிநீர்

வளசரவாக்கம்:வளசரவாக்கம் ஆற்காடு சாலையில், கோடம்பாக்கம் மற்றும் பூந்தமல்லி ஆகிய பகுதிகளை இணைக்கும் விதமாக, மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன.வளசரவாக்கம் ஆற்காடு சாலையின் கீழ், 6 அடி ஆழத்தில், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து, சென்னைக்கு குடிநீர் வழங்கும், 1,200 மி.மீ., விட்டம் கொண்ட குழாய் செல்கிறது.இந்நிலையில், வளசரவாக்கம் -அரசு அதிதிராவிடர் நலத்துறை பள்ளி அருகே, இந்த குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு, சாலையில் குடிநீர் தேங்கி வருகிறது.இதனால், நேற்று காலை அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மெட்ரோ ரயில் பணியின் போது, குடிநீர் குழாய் சேதமடைந்திருக்கலாம் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.அதே இடத்தில், கடந்த ஆண்டும் குடிநீர் குழாய் உடைந்து, சாலையில் தண்ணீர் தேங்கியது. இதையடுத்து, குடிநீர் குழாயை சீர் செய்யும் பணியில், குடிநீர் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை