உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / குழந்தைகள் பாதுகாப்பிற்காக சட்டம் சார்ந்த அலுவலர் பணி

குழந்தைகள் பாதுகாப்பிற்காக சட்டம் சார்ந்த அலுவலர் பணி

சென்னை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடத்திற்கு, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது குறித்து, சென்னை மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை மாவட்டத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலகு செயல்படுகிறது.இதில், சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணியிடம், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.குழந்தைகளின் உரிமைகள் துறையில், குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் https://chennai.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் ஆலந்துாரில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில், நேரிலோ அஞ்சல் வழியாகவோ விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை