உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மதுபாட்டில்கள் விற்ற சாராய சாந்தி கைது

மதுபாட்டில்கள் விற்ற சாராய சாந்தி கைது

சென்னை:மயிலாப்பூர் பகுதியில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்ற, 'சாராய' சாந்தி கைது செய்யப்பட்டார்.மயிலாப்பூர் நொச்சி நகர் பகுதியில், சட்ட விரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, மயிலாப்பூர் போலீசார், அப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்தனர். அப்போது, 23க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களுடன், சாந்தி, 80, என்பவர் சிக்கினார்.சட்ட விரோத மதுபாட்டில்கள் விற்பதை பிரதான தொழிலாக நடத்தி வருவதால், 'சாராய' சாந்தி எனவும் அழைக்கப்படுகிறார். இவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர், மதுபாட்டில்கள் பதுக்கி விற்ற வழக்கில் பல முறை சிறை சென்றவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை