உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லங்-லைப் ஸ்க்ரீனிங் திட்டம் அப்பல்லோவில் அறிமுகம்

லங்-லைப் ஸ்க்ரீனிங் திட்டம் அப்பல்லோவில் அறிமுகம்

சென்னை, நாட்டில் முதன் முறையாக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில், நுரையீரல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற்கான, 'லங் - லைப்' ஸ்க்ரீனிங் செயல்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.சென்னையில் நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியில், அப்பல்லோ மருத்துவ குழும புற்றுநோயியல் சர்வதேச செயல்பாடுகள் துறை இயக்குனர் ஹர்ஷத் பேசுகையில், ''அப்பல்லோ கேன்சர் மையத்தின் பயணத்தில், 'லங்-லைப்' ஸ்க்ரீனிங் செயல்திட்டம் என்பது மைல்கல் நிகழ்வு. ''இதன் வாயிலாக, நாட்டின் புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு குறித்த, தர அளவுகோலை உயர்த்த முடியும்,'' என்றார்.அப்பல்லோ புரோட்டான் கேன்சர் மைய நுரையீரலியல் சிறப்பு டாக்டர் ஸ்ரீதர் ரவிச்சந்திரன் பேசுகையில், ''லங்-லைப்' ஸ்க்ரீனிங் செயல்திட்டம், குறைந்த கதிர்வீச்சு உள்ள சி.டி., ஸ்கேன் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. ''நோயை துல்லியமாக கண்டறிய வழிவகுக்கிறது. புகைப்பிடிப்போர், மற்றவர் விடும் புகையை சுவாசிப்போர், நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு உள்ளோருக்கு, இந்த திட்டம் பயனளிக்கும்,'' என்றார்.நிகழ்ச்சியில் அப்பல்லோ ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, நுரையீரலியல் டாக்டர் வந்தனா, நுரையீரலியல் நிபுணர் ஜெபின் ரோஜர் உட்பட பலரும் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை